ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் அடங்காத வேட்கையுடன் ஒரு திரைப்படத்தைக் காண வந்தார் முதல்வர் கருணாநிதி. அது, முதர்வரின் நெடுநாளைய நண்பர் இளவேனில் இயக்கிய 'உளியின் ஓசை'.
முதல்வர் எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி கதையையே உளியின் ஓசையாக திரைப்படமாக்கியிருக்கிறார் இளவேனில். சொந்தக் கதை, நண்பரின் இயக்கம். இது போதாதா முதல்வருக்கு?
படத்தின் ஒவ்வொரு நகர்வையும் அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டவர், எடுத்தவற்றை அவ்வப்போது திரையில் பார்த்தும் திருப்திப்பட்டுக் கொண்டார். முதல்வரின் வரிகளில் பாடல் ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது.
உளியின் ஓசையின் பிரதானப் பகுதிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, வெளியீட்டுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது படம். இரண்டு நாள் முன்பு முழுப் படத்தையும் பார்த்தார் முதல்வர். கிளைமாக்சில் உணர்ச்சி மேலிட இளவேனிலை பாராட்டியவர், படம் குறித்த தனது திருப்தியையும் அவரிடம் பகிர்ந்து கொண்டார்.