நிழல் இதழும், தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும் இணைந்து சென்னையில் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றன.
மே மாதம் 25 முதல் 31 வரை ஏழு நாட்கள் இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
webdunia photo
FILE
பட்டறையை இயக்குனர் பாலுமகேந்திரா தொடங்கி வைத்துப் பேசுகிறார். தமிழின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வகுப்புகள் எடுக்கின்றனர்.
இந்த ஏழு நாள் பட்டறையில் கேமரா, எடிட்டிங், இயக்கம், திரைக்கதை, நடிப்பு, அனிமேஷன் ஆகியன குறித்து சொல்லித் தரப்படும்.
இறுதி நாளில் பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு இயக்குனர் மகேந்திரன் சான்றிதழ் வழங்குவார்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் நிழல் இதழின் ஆசிரியர் ப. திருநாவுக்கரசை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.