பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு சிங்கம் என பெயர் வைக்கப்போவதாக செய்திகள் வந்த நிலையில், சிங்கம் எனக்குத்தான் என முந்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஹரி!
வேல் படத்தில் நடிக்க விஜயை ஹரி கேட்டதாகவும், அழகிய தமிழ் மகனில் பிஸியாக இருநூததால் விஜய் மறுத்ததாகவும் செய்தி ஒன்று உள்ளது. சேவலில் விஜய் நடிக்க விரும்பியும் ஹரி அதனை மறுத்திருக்கிறார். கூடவே சேவல் டைட்டிலை விஜய் தரப்பு கேட்டதாகவும் ஹரி பிடிவாதமாக மறுத்ததாகவும் கூறுகிறார்கள்.
ஹரி, விஜய் பனிப்போர் உச்சத்தில் இருக்க, நேற்று நடந்த சேவல் தொடக்க விழாவில் பேசிய ஹரி, அடுத்து சூர்யாவை வைத்து இயக்கப் போவதாகவும், படத்தின் பெயர் சிங்கம் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, அதிர்ச்சிக்கு ஆளானது பார்வையாளர் கூட்டம்.
நேற்றைய அறிவிப்பின் மூலம் விஜயை ஷேவ் செய்த சிங்கமாக்கிவிட்டார் ஹரி.