2008-ன் முற்பகுதியில் வெளியாவதாக இருந்தது விக்ரமின் கந்தசாமி. இப்போது வெளியீட்டு தேதியில் மாற்றம். தீபாவளிக்கே படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.
காரணம்?
பைனான்ஸ் பிரச்சனையோ, கால்ஷீட் சொதப்பலோ எதுவுமில்லை. படத்தை இன்ச் பை இன்ச் செதுக்கி வருகிறார் சுசி. கணேசன். படத்தின் குவாலிடிக்காகவாம் இந்த தாமதம்.
மேலும், மெக்சிகோவில் சில காட்சிகள் எடுக்க உள்ளனர். மெக்சிகோவின் புகழ்பெற்ற காளைச் சண்டையும் இதில் அடக்கம். இதற்காக விக்ரம், ஸ்ரேயா, கேமராமேன் ஏகாம்பரம் உள்ளிட்ட கந்தசாமி டீம் சில நாட்களில் மெக்சிகோ செல்கிறது. அங்கு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க சுசி. கணேசனும், தயாரிப்பாளர் தானுவும் ஏற்கனவே மெக்சிகோ சென்றுள்ளனர்.
கந்தசாமியில் தசாவதாரம் கமலுக்கு இணையாக பல கெட்டப்புகளில் வருகிறார் விக்ரம். கெட்டப்புகளை சீக்ரட்டாக வைத்திருக்கிறார் சுசி. கணேசன்.