மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்து விட்டுக் கொள்ளுங்கள். கேட்கப் போவது கொஞ்சம் ஆச்சரியமான தகவல்.
குசேலனில் எனது பார்ட் வெறும் 25 சதவீதமே என ஏற்கனவே தெள்ளத் தெளிவாக விளக்கினார் ரஜினி. ஆனால், அவர் சொல்வதை யார் கேட்கிறார்கள். குசேலனை ரஜினியின் பிற படங்களைப் போலவே கொண்டாடுகிறார்கள்.
படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு முடியாத நிலையில் தமிழ், தெலுங்கு இரு மொழி ரைட்சையும் விலைபேசியிருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம். இரு மொழிகளுக்கும் சேர்த்து அந்நிறுவனம் நிர்ணயித்திருக்கும் சேர்த்து விலை அறுபத்து நான்கு கோடிகளாம்! பேரம் பேசி விலையும் படிந்துவிட்டதாம்.
படப்பிடிப்பு முடியும் முன்பே படத்தை தயாரித்தவர்களை குபேரர்களாக்கியிருக்கிறது குசேலன்.
ஜூலை பதினெட்டாம் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பி. வாசு.