அரிவாளும், வடிவேலும் இல்லாமல் ஹரியால் படமெடுக்க முடியாது. தாமிரபரணியில் மிஸ்ஸான வைகைப் புயல், ஹரியின் புதிய படம் சேவலில் நடிக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில்.
இதில் ஒரு வேடம் கூத்துக் கலைஞராம். திருநெல்வேலி கணியின் கூத்து கலைஞராக நடிப்பதால் கூத்து பற்றியும், திருநெல்வேலி பாஷை குறித்து டியூஷன் எடுத்துக் கொண்டாராம் வடிவேலு.
நடிக்கிற படங்களில் ஒரு பாடலிலாவது தலைகாட்டுவது கவுண்டமனியின் ஸ்டைல். வடிவேலுவும் அந்த ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவது போலவே, சேவலிலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறாராம். சுருக்கமாக பரத்துக்கு இணையான கேரக்டராம் வடிவேலுவுக்கு!