வெளிநாட்டில் பாடல் காட்சிகளை எடுக்கச் செல்லும் இயக்குனர்கள் தவறாமல் சொல்லும் ஒரு விஷயம், 'இதுவரை யாரும் படமாக்காத லோகேஷன்'!
ஜெயம் கொண்டான் இயக்குனர் ஆர். கண்ணனும் இதையே கூறுகிறார். மற்றவர்கள் எப்படியோ, இவர் கூறுவதில் உண்மை ஓரளவு இருக்கவே செய்கிறது.
வினய், பாவனாவின் டூயட் பாடலை எடுக்க இவர்கள் செல்லயிருப்பது உஸ்பெகிஸ்தான். முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான உஸ்பெகிஸ்தானில் இதுவரை எந்தத் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பும் நடத்ததில்லையாம்.
ஒரு பாடலை ரஷ்யாவில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளாராம் கண்ணன்.