புதன், 7 மே 2008 (13:36 IST)
ஆசை யாரை விட்டது? இந்திப் படங்களுக்கு உலக அளவில் மார்க்கெட் உயர்ந்தாலும் உள்ளூரைக் கைவிட அவர்களுக்கு மனமில்லை.
தமிழில் இந்திப் படங்களை மொழிமாற்றம் செய்தால் ஓடவே ஓடாது என்பதை ஜோதா அக்பரும், ரேஸூம் நிரூபித்து விட்டன. அதையும் மீறி, புதிய இந்திப் படமொன்றை அது வெளியாகும் அதே நாளில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
பூத்நாத் என்ற அந்தப் படத்தில், அடிக்கடி யார் பெரியவன் என்று மோதிக்கொள்ளும் அமிதாப்பச்சனும், ஷாரூக்கானும் இணைந்து நடித்துள்ளனர். உடன் ஷாரூக்கின் முன்னாள் தொழில் பார்ட்னர் ஜூஹூ சாவ்லாவும் உண்டு.
பூத்நாத் வரும் ஒன்பதாஙம தேதி வெளியாகிறது. அதனை அதேநாளில் பூமிநாதன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
இந்தியின் மேகா ஸ்டார்களாவது தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிப்பார்களா, பார்ப்போம்!