தசாவதாரம் பட‌த்தை ‌திரையிட விடமாட்டோம்: ராமகோபால‌ன்!

செவ்வாய், 6 மே 2008 (13:04 IST)
''ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிகா‌ட்‌சியை ‌நீ‌க்கா‌வி‌ட்டா‌ல் 'தசாவதார‌ம்' பட‌த்தை ‌திரை‌யிமா‌ட்டோ‌ம்'' எ‌ன்றஇந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இததொட‌ர்பாஅவ‌ரவெளியிட்டுள்ள அறிக்கையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 10 வேடங்களில் கமலஹாசன் நடிக்கும் `தசாவதாரம்' சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள்.

அப்போது கோ‌யிலில் இருந்த சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. மாலிக்காபூர் படையெடுப்பு காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோ‌யில் தாக்கப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு நடந்த அட்டூழியங்களையும், முஸ்லிம்கள் தங்கள் கோ‌யிலையும் தாக்குவார்கள் என்று எண்ணி ஸ்ரீரங்கப் பெருமானை காப்பாற்றிக் கொள்ள 43 ஆண்டுகள் சாமி சிலைகளை வைணவர்கள் தூக்கிக் கொண்டு சென்ற வரலாற்றுச் சம்பவங்களை எல்லாம் படமாக எடுக்க கமலஹாசனுக்கு துணிவு உண்டா? அப்படி எடுத்தால் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா? தமிழக அரசும், திரைப்படத் தணிக்கை துறையும் தான் அனுமதிக்குமா?.

எனவே, சர்ச்சைக்குரிய திரைக் காட்சிகளை சினிமாவில் அனுமதிக்கக் கூடாது, நீக்க வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் 'தசாவதாரம்' திரைப்படத்தை பக்தர்கள், பொதுமக்கள் துணைகொண்டு, அவர்கள் தலைமையில் இந்து முன்னணி போராடி தடுக்கும். தமிழகத்தில் எங்கும் திரையிட விடமாட்டோம் என்றும் எச்சரிக்க விரும்புகிறோம் எ‌ன்றராமகோபா‌ல‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.