சொ‌ந்த‌க் குர‌லி‌ல் பேச...

வியாழன், 1 மே 2008 (19:41 IST)
ச‌ஞ்ச‌ய்ரா‌ம் இய‌க்க‌த்‌தி‌ல் வெ‌‌ளிவர‌ப்போகு‌ம் பட‌ம் பூவா தலையா. இ‌தி‌ல் ஷெ‌ரினு‌க்கு ‌பிராமண‌ப் பெ‌ண் வேட‌ம். தா‌ன் ஏ‌ற்று‌ள்ள இ‌ந்த வேட‌ம் த‌ன் நடி‌ப்‌பி‌ல் பு‌‌திய ப‌ரிணாம‌த்தை‌க் கா‌ட்டு‌ம் எ‌ன்‌று பெருமை பேசு‌கிறா‌ர் ஷெ‌ரி‌ன்.

பிராமண‌ப் பெ‌ண் வேட‌ம் போ‌ட்டா‌ல் போதுமா. ‌பிராமண பாஷை பேச வே‌ண்டாமா. அத‌ற்காக‌த் த‌னி‌ப்‌ப‌யி‌ற்‌சியு‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ட‌ப்‌பி‌ங்‌கி‌ல் பா‌ர்‌த்து‌க்கொ‌ள்ளலாமே எ‌ன்றா‌ல் "மூ‌ச் எ‌ன் சொ‌ந்த‌க் குர‌லி‌ல்தா‌ன் பேசுவே‌ன். தே‌சிய ‌விருது வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் சொ‌ந்த‌க் குர‌லி‌ல் பேச வே‌ண்டு‌ம் எ‌ன்பது க‌ட்டாய‌ம். அ‌ப்படி‌யிரு‌க்க ட‌ப்‌பி‌ங் அது இதுவெ‌ல்லா‌ம் வே‌ண்டா‌ம் நானே பேசுவே‌ன் எ‌ன்று அட‌ம்‌பிடி‌க்‌கிறா‌‌ர்" ஷெ‌ரி‌ன்.

மு‌ன்ன‌ணி நடி‌கைகளான ஜோ‌திகா, ‌சி‌ம்ர‌ன், லைலா, ‌சினேகா கூட செ‌ய்யாத முய‌ற்‌சி இது.

வெப்துனியாவைப் படிக்கவும்