பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் ராஜேஷுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் 'இனி ஒரு சுதந்திரம்'. சாதாரண பொதுநலத் தொண்டனாக இருந்து அரசியல்வாதியாகி பின் சுயநலவாதியாக மாறும் அற்புதமான கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.
அதன்பின் 'அந்த ஏழு நாட்கள்' பாக்யராஜ் இயக்கி நடித்த படத்தில் அருமையான குணசித்திர வேடம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெறச் செய்த படம் அது. அதற்குப் பின்னால் கொஞ்ச காலம் எந்தப் படத்திலும் நடிக்காமல், தன் சொந்த 'ரியல் எஸ்டேட்' பிஸினஸில் பிஸியாக இருந்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் நடிக்கப் போய்... இப்போது சாதுவான அப்பாவா கூப்பிடு ராஜேஷை என்கிற அளவுக்கு படங்கள் குவியத் தொடங்கிவிட்டன.
அந்த வகையில் தற்போது படப்பிடிப்பில் 'காதலர் கதை', 'புதிய வார்ப்புகள்', 'அந்தோணி யார்?' ஆகிய படங்கள் உள்ளன. நீங்களாவது சம்பளத்தைக் கூட்டாமல் நடிங்க ராஜேஷ் சார்.