வெளிநாட்டில் பாடல்கள்!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (18:44 IST)
'பிடிச்சிருக்கு' என்ற படத்தை மூன்றரைக் கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமெடுத்தது 'கூல் புரொடக்சன்'. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க என்பது தியேட்டர்களை வாடகைக்குப் பிடித்து சொந்தமாகவே ரிலீஸ் செய்தது. ஆனால், படம் சரியாகப் போகாததால் பெரிய நஷ்டத்துகூகு ஆளானது.

இன்று அதே நிறுவனம் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' எனும் படத்தை எடுத்து வருகிறது. இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்தியும், சந்தியாவும் இந்தப் படத்தின் மூலம் இணைகிறார்கள். மொத்த காட்சிகளும் எடுத்து முடிக்க, ஒரே ஒரு நாள் மட்டும் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் படமெடுக்க உள்ளனர்.

பட்ஜெட் படம் என்றாலும் இப்படத்தின் இயக்குனர் ரவி (லிங்குசாமியின் அசோஸியேட்) பாடல்கள் வெளிநாட்டில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல, அவரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் பாடல் காட்சிகள் எடுத்து விரைவில் படத்தை வெளியிட இருக்கின்றனர். இந்த மகே¤ம் சரண்யாவும் தயாரிப்பாளரை 'கூல்' ஆக்கட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்