நமிதா தெரிவித்த சம்மதம்!
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (17:02 IST)
சம்பளம் கொடுக்கிறார்கள், தங்குவதற்கு அறை கொடுக்கிறார்கள், உணவு, உடை, வாகன வசதி என எல்லாம் தருகிறார்கள். நமிதாவுக்கு இது போதவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் பக்கத்தில் வந்து தொட்டுப் பேசும் ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பும் கேட்கிறார்.
அழகான பொண்ணுதான் படப்பிடிப்பிற்கு கொடைக்கானல் போனபோது, நமிதாவைச் சுற்றி வளைத்துத் தொந்தரவு செய்தார்களாம் ரசிகர்கள். பாதுகாப்பு சரியில்லை என்று அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் சென்னைக்குப் பறக்க, விஷயம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குச் சென்றது. பஞ்சாயத்தில் நமிதா, அழகான பொண்ணுதான் தயாரிப்பாளர் திரு கலந்து கொண்டனர்.
ஒன்றரை மணிநேர பேச்சிற்குப் பின் நமிதா கொடைக்கானல் செல்ல சம்மதித்தார். அவருக்கு உரிய பாதுகாப்புத் தர தயாரிப்பாளரும் ஒத்துக்கொண்டார்.
போகிற போக்கைப் பார்த்தால் நடிகைகளுக்கு எல்லாம் கருப்புப் பூனைப்படை தேவைப்படும் போல!