தமிழ் சினிமாவின் நெ.1 நடிகை யார்? சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் கேட்டால், எனக்கு நம்பரில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று சதாய்ப்பார்கள். அதற்காக அப்படியே விட முடியுமா?
webdunia photo
WD
அசின், ஸ்ரேயா, த்ரிஷா, நயன்தாரா இவர்களுக்குள்தான் போட்டி. அசின் இந்தி ஃபீல்டை வளைப்பதில் மூழ்கியிருப்பதால் தமிழ் பக்கமே தலைவைப்பதில்லை. ஸ்ரேயா இன்னும் சிவாஜி நிழலில்தான் குளிர் காய்கிறார். நிஜமான போட்டி த்ரிஷா நயன்தாராவுக்குதான்.
'யாரடி நீ மோகினி' ஹிட். அடுத்து விஷாலுடன் சத்யம், அஜித்துடன் ஏகன். குருவிக்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் இவரே ஹீரோயின். விஜய் படத்துக்கு நயன்தாராவுக்கு சம்பளம் ஒரு கோடி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது த்ரிஷா தமிழில் வாங்கும் சம்பளத்தை விட அதிகம்.
ஆக, நெ.1 இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குதான் என்கிறார்கள் கோடம்பாக்க திண்ணைவாசிகள். குருவி ரிலீசுக்குப் பிறகு நிலைமை மாறலாம் என்கிறார்கள் அவர்களே.