மே மாதம் தசாவதாரம் திரைக்கு வருகிறது. அதனையடுத்து கமல் இயக்கி நடிக்கும் படம் மர்ம யோகி. தசாவதாரத்தைவிட மர்ம யோகியின் பட்ஜெட் அதிகம்.
இதன் திரைக்கதையை எழுதி தனது லேப்டாப்பில் பத்திரப்படுத்தியுள்ளார் கமல். அவ்வப்போது திரைக்கதையில் மாற்றம் செய்து மெருகேற்றி வருகிறார்.
பெரிய பட்ஜெட் படமான மர்ம யோகியை வால்ட் டிஸ்னி நிறுவனமும், பரத்பாலாவும் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் வந்தேமாதரம் ஆல்பத்தை பரத்பாலா தயாரித்தது குறிப்பிடத்தக்கது.