மும்தாஜ் அனுப்பிய கடிதம்!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:21 IST)
திரையுலகம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அனேகமாக எல்லோரும் கலந்து கொண்டனர். கலந்து கொள்ளாதவர்கள் அதற்கான காரணத்தை தொலைபேசி மூலமாகவும், கடிதம் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.

கலந்து கொள்ளாதவர்களில் 97 சதவீதம் பேர் இதுவரை விளக்கமளித்துள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாத மும்தாஜும் அதற்கான காரணத்தை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மும்தாஜுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். ஒருகட்டத்தில் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. உடனே மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனவர், அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

திரையுலகினர் உண்ணாவிதம் இருந்தபோது மருத்துவமனையில் இருந்திருக்கிறார் மும்தாஜ். கடிதத்தில் இந்த காரணத்தை தெரியப்படுத்தியவர், போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாததற்கு தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்