பத்து தயாரிப்பு நிறுவனங்கள், பத்து தயாரிப்பாளர்கள், பத்துப் படங்கள், இருபது கோடி ரூபாய்கள்!
பிரமிட் சாய்மீரா நிறுவனம் நலிந்த பத்து தயாரிப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய் பணம் பைனாஸ் செய்து அவர்களை மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடுத்தியது.
இந்த வித்தியாசமான விழா சென்னையில் நடைபெற்றது. பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.எஸ். சாமிநாதன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவரது மனைவி உமா சாமிநாதன் குத்து விளக்கேற்றினார்.
புரோகிதர்கள் மந்திர ஓத, பத்து தயாரிப்பாளர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு, தாம்பூலத் தட்டில் இரண்டு கோடிக்கான 'செக்'கை வைத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர். கொடுக்கும் பொறுப்பை சத்யராஜ், சிபிராஜ், விஜயகுமார், பரத், ஜீவா, ஜெயம் ரவி, பிரசன்னா, முரளி, பார்த்திபன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் ஏற்றுக் கொண்டார்.
இந்த வித்தியாசமான விழாவில் அனைத்து சினிமா சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்த உதவி ஒரு தொடக்கம்தானாம். இன்னும் இதுபோல 14 நலிந்த திரைப்பட நிறுவனங்களுக்கு உதவி செய்ய திட்டம் வைத்துள்ளதாம் பிரமிட் சாய்மீரா.