சிவமயத்தில் ஸ்ரீதேவிகா!

சனி, 5 ஏப்ரல் 2008 (18:41 IST)
சஞ்சய்ராமின் புதிய புராஜெக்ட் சிவமயம். ஷாமுடன் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

சஞ்சய்ராமின் படமென்றால், சில விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். இதுவும் தாதா கதை. உண்மையில் நடந்த சம்பவம். சிறிய வேடமொன்றில் சஞ்சய்ராம் நடிக்கிறார். பாடல்களும் அவரே.

இதில் ஷாமின் ஜோடியாக நடிப்பவர் ஸ்ரீதேவிகா. ராமகிருஷ்ணாவுக்குப் பிறகு காணாமல் போன அதே ஸ்ரீதேவிகா. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்