வேதிகாவின் புதிய படம்!
சனி, 5 ஏப்ரல் 2008 (17:48 IST)
'மலைக்கோட்டை' படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் அடுத்து தனது தம்பியை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார்.
ராஜா- ஜெயம் ரவி, செல்வராகவன்- தனுஷ், ஜோதி கிருஷ்ணா- ரவி கிருஷ்ணா என்ற அண்ணன் தம்பி காம்பினேஷனில் இது புதுவரவு. சொல்ல மறந்து விட்டோமே, பூபதி பாண்டியன் தம்பி பெயர் அர்ஜுன் பாபு.
தம்பிக்கு கதையை தயார் செய்தவரால் நல்ல ஜோடியை தயார் செய்ய முடியாமல் இருந்தது. மலையாள 'முல்லா' படத்தில் நடித்திருக்கும் மீரா நந்தன் வரை முயற்சி செய்தார். கடைசியில் அகப்பட்டவர் வேதிகா.
'காளை'யில் சிம்புவுடன் நடித்த வேதிகா, தற்போது தாணுவின் மகன் கலா பிரபு இயக்கும் 'சக்கரக்கட்டி' படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் நடித்து வருகிறார்.
பூபதி பாண்டியன் தனது புதிய படத்துக்கு 'நானும் என் சந்தியாவும்' என்று பெயர் வைத்துள்ளார். ரொமான்டிக் டைட்டில் என்றாலும் காமெடிக்கும், ஆக் ஷனுக்கும் முக்கியத்துவம் உள்ள கதையாம்.