கெளதமுக்கு ஒரு ராசி. அவர் இயக்கும் எந்தப் படமும் குறித்த காலத்தில் வெளியாவதில்லை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, இப்போது வாரணம் ஆயிரம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
த்ரிஷாவுடன் புதுமுகங்கள் நடிக்கும் சென்னையில் ஒரு மழைக்காலமும் பாதியிலேயே நிற்கிறது. சூர்யா அசின் நடிப்பில் உருவாகவிருந்த சென்னையில் ஒரு மழைக்காலம் சிலப் பிரச்சனைகளால் கைவிடப்பட்டது. பிறகு அதே பெயரில் த்ரிஷா நடிக்க ஒரு படத்தை தொடங்கினார் கெளதம். வாரணம் ஆயிரம் படத்தால் புதிய மழைக்காலமும் தூறலுடன் நின்றுபோனது.
ஏப்ரலுக்கு மேல் கோடையில் நின்றுபோன சென்னையில் ஒரு மழைக்காலத்தை தொடர திட்டமிட்டுள்ளார் கெளதம். இதற்கு இசையமைச்ச ஏ.ஆர். ரஹ்மானிடம் கெளதம் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.