செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:27 IST)
கோடம்பாக்கத்தில் அவசரத்தில் யாரையும் இடித்து விட்டால் ஒன்னும் பதற வேண்டியதில்லை. சினிமாவில் பாட்டெழுதும் முயற்சியில் இருக்கிறீர்களா? என்று மட்டும் கேட்டால் போதும், யாராவது இசையமைப்பாளர் தெரியுமா சார் என்ற படி இடிபட்டவர் நண்பராகி விடுவார்.
நடிக்க, இயக்க ஊர் விட்டு கிளம்பி வந்தவர்களைவிட பாடல் எழுத வந்திருப்வர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி விட்டது.
ஒரு பாட்டுக்கு அப்படி எவ்வளவுதான் தருவார்கள்? இதோ லிஸ்ட் 1 பாட்டுக்கு, தலைமை கவிஞர்களுக்கு 30,000, 20,000, இரண்டாம் நிலை கவிஞர்களுக்கு 10,000, 5,000.
புதிய முயற்சியில் உள்ளவர்களுக்கு பாடல் ஒன்றுக்கு 3,000, 1,000 கூட உண்டு. தூதுதான் கவிஞர்கள் பட்ஜெட். ஆனால் இசையமைப்பாளர்கள் ஒரு படத்துக்கு பாடல் கம்போஸிங்காக அயல்நாடுகள் சென்று திரும்பிவரும் செலவுகள் மட்டுமே (சம்பளம் நீங்கலாக) சில லகரங்களை தாண்டுகிறதாம்.