ஆறு மாத தாடியும், அழுத்தமான பார்வையுமாக தடாலடி போலீசாக நடித்துக் கொண்டிருந்த அஜித், க்ளீன் ஷேவ் முகமும், கிளிசரின் கண்களுமாக மாறிவிட்டார். ஏகன் படத்துக்காகத்தான் இந்த கெட்டப் சேஞ்ச்!
ஆக்சன் காட்சிகளுக்கு இணையாக ஏகனில் சென்டிமெண்ட் காட்சிகளும் உண்டு. கதைப்படி அஜித்தின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் அஜித். இரண்டாவது மனைவி சுஹாசினி. அவரது மகன் நவ்தீவ்.
இந்த அக்னி நட்சத்திர குடும்பத்தில் சில அழகான சென்டிமெண்ட் நிகழ்வுகள் நடக்கின்றன. அந்தக் காட்சிகளைத்தான் எடுக்கிறார் ராஜுசுந்தரம். இதனைத் தொடர்ந்து அஜித், நயன்தாரா இடம்பெறும் பாடல் காட்சி எடுக்கப்படவுள்ளது.