ஜி.ஆர். கோல்டு ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம், நான் ஒரு ராஜா மகன். காசு இருக்கணும் படத்தில் அறிமுகமான தயாரிப்பாளர் ஜி. ஆரின் மகன் விஷ்வா ஹீரோ.
விஷ்வா தற்போது ஆண்டாள் அழகர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜி.ஆர். தயாரித்து இயக்கும் நான் ஒரு ராஜா மகன் தொடங்குகிறது.
நாடகங்களிலும், சினிமாவிலும் நடித்த அனுபவம் ஜி.ஆருக்கு உண். ஆனால் இதுவரை படம் இயக்கியதில்லை. தானே தயாரிபபாளர் என்பதால் துணிந்து இயக்குனராகிறார். காதல், காமெடி, ஆக்சன் என அனைத்தும் நிறைந்த நவரசமாக நான் ஒரு ராஜா மகன் இருக்கும் என்கிறார்.
படம் எப்படியோ இருக்கட்டும். சொந்தக் காசில் ரிஸ்க் எடுப்பதற்காக ஜி.ஆரை பாராட்டியே ஆகவேண்டும்!