இந்திய அரசாங்கம் மீது கோபத்தில் இருக்கிறார்கள் சினிமாவைச் சேர்ந்தவர்கள். பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கெடுபிடி செய்வதால்தான் இந்த கோபம்.
சமீபத்தில் அரசாங்கம் படத்தின் ஷ¥ட்டிங்கை விமான நிலையத்தில் நடத்த அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். விஷாலின் சத்யத்திற்கு விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது. ஆனால், ரன்வேயில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு நோ அனுமதி!
நொந்துபோன இயக்குனர் ராஜசேகருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது துபாய் அரசு. ரன்வேயில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்காக தனது நாட்டு ரன்வேயை பயன்படுத்திக்கொள்ள துபாய் அரசு முன்வந்துள்ளது. இயக்குனர் ராஜசேகருடன் விஷால், உபேந்திரா ஆகியோர் விரைவில் துபாய் செல்கின்றனர்.
ஹாலிவுட் படங்களுக்கு தனது ராணுவ தளவாடங்களையே தந்து உதவுகிறது அமெரிக்க அரசு. இந்திய அரசிடம் மட்டும் ஏனிந்த கெடுபிடி?