காஜல் அகர்வால் தமிழில் நடித்த முதல் படம் பொம்மலாட்டம். படம் இன்னும் திரைக்கு வரவில்லை. பேரரசுவின் கருணையால் பழனி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்குப் பிறகு காஜலுக்கு தொடர்ந்து மொட்டைதான்!
சிலம்பாட்டத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு வாசலோடு திரும்பிவிட்டது. இப்போது சிம்பு ஜோடியாக சினேகா நடிக்கிறார்.
அதேபோன்று பூபதி பாண்டியனின் நானும் என் சந்தியாவும் படத்தில் காஜல்தான் கதாநாயகி என்றார்கள். இப்போது அவரை தூக்கிவிட்டு மீரா நந்துவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நயன்தாரா, பானு, மீரா ஜாஸ்மின் என்ற மலையாள நடிகைகளின் வரிசையில் நூற்றியொன்றாவது வரவு மீரா நந்து.
பூபதி பாண்டியனின் தம்பி அர்ஜுன் பிரபு நானும் என் சந்தியாவும் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
தொடர்ந்து இரண்டு படங்கள் கைநழுவியதால் காஜலின் முகத்தில் கலக்கம். வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் காலத்தில் வந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளத் தெரியாத காஜலை வெள்ளந்தி என்பதா? விவரம் கம்மி என்பதா?