ஏவி.எம்.மின் அயன்!

சனி, 15 மார்ச் 2008 (17:46 IST)
சிவாஜி படத்துக்குப் பிறகு ஏவி.எம். தயாரிக்கும் படம் அயன். சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி தமன்னா.

கனா கண்டேன் படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் இயக்கும் படம் இது. இரட்டை எழுத்தாளர்களான சுபா, அயன் படத்தின் கதை, திரைக்கதை எழுதுகிறார்கள்.

படத்தைப் பற்றி கூறிய கே.வி. ஆனந்த், அயன் காதல், ஆக்சன் கலந்த கமர்ஷியல் படமாக இரக்கும் என்றார்.
கமர்ஷியல் படங்களிலும் ஒரு கருத்து இருக்க வேண்டும், அது இந்தப் படத்தில் இருக்கும் என மேலும் அவர் கூறினார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு.

அயன் என்றால் என்ன என்று கேட்டதற்கு, தனித்து நிற்பவன் என்று விளக்கமளித்தார் ஆனந்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்