ஸ்ரேயா வேடத்தில் த்ரிஷா!

செவ்வாய், 11 மார்ச் 2008 (18:24 IST)
webdunia photoWD
கால் சென்டர்களில் நடக்கும் க்ரைமையும், செக்ஸையும் சேர்த்துப் பிசைந்தால் கியாரண்டியான தமிழ்ப் படம் ஒன்றை எடுக்கலாம். அதைத்தான் செய்கிறார் கெளதம்.

வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு கெளதம் இயக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம், கால் சென்டர்களல் நடக்கும் கதையாம். நவீன வாழ்க்கை முறையும், அதன் பக்க விளைவுகளும் கெளதம் அளவிற்கு தெரிந்த வேறு இயக்குனர்கள் இல்லை.

இவரது சென¨னியல் ஒரு மழைக்காலத்தில் கால் சென்டரில் வேலை பார்ப்பவராக நடிக்கிறாராம் த்ரிஷா. இதே வேடத்தில்தான் அதர் எண்ட் ·ப் தி லைன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா. இந்த கேரக்டருக்காக தனது தோழியின் தோழியிடம் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் ஸ்ரேயா.

த்ரிஷாவுக்கு யாரையும் தேடிப் போய் பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்ரேயாவிடமே நேரடியாக கற்றுக் கொள்ளலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்