சரத்குமார் நடித்த 'வைத்தீஸ்வரன்' மார்ச் 15 வெளியாகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சரத்குமார்!
படத்தைப் பற்றி கூறிய சரத், வைத்தீஸ்வரன் மறுஜென்மம் தொடர்பான கதை. இதில் மனோதத்துவ டாக்டராக நடித்துள்ளேன் என்றார்.
உங்களுக்கு மறுஜென்மத்தில் நம்பிக்கை உண்டா என்ற கேள்விக்கு, கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், மறுபிறவி பற்றி தெரியாது என்றார். (ஆக, வருங்கால முதல்வர் தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தில்தான் நடித்திருக்கிறார்).
வைத்தீஸ்வரனை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்தப் படங்களில் எந்த மாதிரி கேரக்டரில் நடிப்பது என்பதை தீர்மானிப்பேன் என்றார் சரத்.
விரைவில் வெளியாக இருக்கும் இவரது 1977, காசினோ ராயல் மாதிரி ஆக்ஷன் படமாம். அடுத்து கே.எஸ். ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிப்பதாக தெரிவித்ததவர், "டிசம்பரில் செல்வராகவ்ன இயக்கும் படத்தில் நடிக்கிறேன்" என்றார்.