நடிகர்களுக்குதான் அரசியல் என்றால் அர்வா. நடிகைகளுக்கு தீராத அச்சம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு அவருக்கு கதாநாயகி கிடைப்பது மாநாட்டுக்கு ஆள் சேர்ப்பதை விட கடினமாகிவிட்டது.
அரசாங்கத்தில் உள்ளூர் நடிகைகள் நடிக்க மறுத்ததால்தான் பஞ்சாபிலிருந்து நவ்நீத் கெளரை இறக்குமதி செய்தார்கள். இன்னொரு இறக்குமதி ஷெரில் பிரிண்டோ.
தங்கராஜ் தயாரிக்கும் விஜயகாந்துடன் நடிக்க உள்ளூர் நடிகைகள் தயங்குகிறார்கள். அம்முவாகிய நான் பாரதியிடம் கேட்டதற்கு, கால்ஷீட் இல்லையென்று கைவிரித்திருக்கிறார்கள். அதேநேரம் அறிமுக இயக்குனரின் ஆழி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
புரட்சி கலைஞர் என்றால் நடிகைகளுக்கு ஏனிந்த அதிர்ச்சி என்றுதான் தெரியவில்லை!
தங்கராஜின் யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோடியில் நீ ஒருவன் என்ற பெயர் பரிசீலனையில் இருந்தது. இப்போது எங்கள் ஆசான் என படப்பெயரை மாற்றியுள்ளனர்.