மா‌ர்‌ச் 14 இ‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌த் ‌திரை‌‌ப்பட ‌விழா!

சனி, 8 மார்ச் 2008 (14:29 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌த் ‌திரை‌ப்பட ‌விழா வரு‌கிற 14 ஆ‌ம் தே‌திய‌ன்று பெ‌ங்களூரு‌வி‌ல் து‌வ‌ங்‌கி 4 நா‌ட்க‌ள் நட‌க்‌கிறது.

ஆ‌‌‌ஸ்‌ட்ரே‌லிய‌ அயலுறவு‌த் துறை, ‌திரை‌ப்பட ஆணைய‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் சா‌ர்‌பி‌ல் நட‌த்‌த‌ப்படு‌ம் இ‌‌த்‌திரை‌‌‌ப்பட ‌விழா‌வி‌ல், வா‌ழ்‌விய‌ல் சா‌ர்‌ந்த ‌திரை‌ப்பட‌‌ங்க‌ள் அ‌திக‌ம் இட‌ம்பெற உ‌ள்ளன.

ஆ‌ஸ்‌ட்ரே‌லிய வரலாறு, வா‌ழ்‌க்கை முறை, ‌திரை‌ப்பட‌த்துவ சாதனைக‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌திரை‌ப்பட‌ங்களு‌ம் ‌திரை‌யிட‌ப்படு‌ம்.

இ‌த்‌திரை‌ப்பட‌‌ங்க‌ள் யாவு‌ம் ப‌ல்வேறு மு‌ன்ன‌ணி ச‌ர்வதேச‌த் ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌ளி‌ல் ‌திரை‌யிட‌ப்ப‌ட்டு பெரு‌ம் வரவே‌ற்பை‌ப் பெ‌‌ற்றவை எ‌ன்று ஆ‌ஸ்‌ட்ரே‌லிய தூதரக‌ம் ‌விடு‌த்து‌‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திரை‌ப்பட ‌விழாவானது, ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் செ‌ல்லு‌ம் 4 நப‌ர்களை‌ச் சு‌‌ற்‌றி நட‌க்கு‌ம் ம‌ர்ம‌த்தை ‌பிர‌‌மி‌க்க வை‌க்கு‌ம் ‌வித‌‌த்‌‌தி‌ல் வெ‌ளி‌ப்படு‌த்‌திய '‌ஜி‌ந்தாபை‌ன்' எ‌ன்ற பட‌த்துட‌ன் துவ‌ங்கு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்