சேரன் நடிக்க வந்தபோது அவரை எதிர்த்தவன் நான் என்றார், சேரனை வைத்து ராமன் தேடிய சீதையை இயக்கிக் கொண்டிருக்கும் ஜெகன்நாத்.
புதிய கீதை, கோடம்பாக்கம் படங்களை இயக்கிய ஜெகன்ஜி தான், ஜெகன்நாத் ஆகியிருக்கிறார். சேரன், பசுபதி, நிதின் சக்ரவர்த்தி, மோசர் பேரின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ராமன் தேடிய சீதை படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார் ஜெகன்நாத்.
வழக்கமாக வேகமாக பேசும் சேரனின் பேச்சில் சோகம். நவ்யா நாயருடன் இனைந்து கிசுகிசுக்கள் எழுதுவதால் குடும்பத்தில் பிரச்சனைகள் என்று கூறியவர், பத்திரிக்கைகள் கூறுவதுபோல் எந்த நடிகைக்கும் நான் சிபாரிசு செய்வதில்லை என்றார்.
சமீபத்தில் ஒரு பத்திரிக்கை, சேரனுக்கு கமல் என்று நினைப்பு. கமல் மாதிரி ஆகணும்னு நினைத்தால்தான் அவரது முட்டி அளவுக்காவது வரமுடியும் என்று சேரன் சொன்னபோது, அவர் கண்களில் கண்ணீர். பாவம் சேரனை விட்டுடுங்கப்பா!
இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்த எனக்கு மூன்றாவது படம் கிடைத்தது அதிசயம் என்றார் ஜெகன்னாத்.