குசேலன் படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றவே ரஜினிக்கு ஆசை. குசேலனின் ஒரிஜினல் மலையாளப்படமான கதபறயும்போன் படத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் வேடத்தில் தோன்றிய மம்முட்டி எட்டே எட்டு காட்சிகளில் மட்டுமே வருவார்.
பி.வாசு அந்த கதாபாத்திரத்தை ரஜினிக்காக, படம் முழுவதும் வருவதுபோல் மாற்றினார். இதனை ஓத்துக்கொள்ளாத ரஜினி 'பத்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் தருவேன்' என்று கூறியதாக செய்திகள் வந்தன.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். ரஜினியும் கரைந்திருக்கிறார். பி.வாசுவின் விருப்பப்படி 25 நாட்கள் கால்ஷீட் தர சம்மதித்துள்ளார் ரஜினி. முதலில் பத்துநாள், பிறகு கிளைமாக்ஸ்-க்கு பத்துநாள் என கால்ஷீட் பிரித்து கொடுத்திருக்கிறார்.
அஜித்தின் கிரீடம் படத்தின் பாடல் காட்சியொன்றை கேரளாவின் ஆலப்பி பகுதியில் படமாக்கினர். அக்கம், பக்கம் என்ற அந்தப்பாடல் சூப்பர் ஹிட்டானது. அதே ஆலப்பியில் குசேலனின் பாடல்காட்சி ஒன்றும் படமாக்கப்பட உள்ளது. கிளைமாக்ஸ் காட்சியை பொள்ளாச்சியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமர் இசையமைப்பில் பாடல்கள் கம்போசாகி வருகின்றன.