மார்க்கெட் இழக்கும் போது நடிகைகள் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவு திருமணம்! கோபிகா புத்திசாலி, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
மலையாளத்தில் மட்டும் கோபிகாவுக்கு ஒன்றிரண்டு வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் அத்தி பூத்தால்தான் உண்டு. வெள்ளித்திரை நாளை வெளியானால், கோபிகாவின் கையில் தமிழ்ப் படங்களின் கணக்கு 'நில்' பேலன்சுக்கு வந்துவிடும்.
இதையொல்லாம் கூட்டிக் கழித்து கல்யாணம்தான் பெட்டர் என முடிவு செய்துள்ளார். அவருக்கு மாப்பிள்ளை தேடும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை. தொழிலதிபராக இருந்தால் உடனே பரிசீலிக்கப்படும். தகுதி இருப்பவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்!