படங்கள் நிறைய நடித்தாலும், அண்ணன் ராஜா இயக்கிய படங்களே ஜெயம் ரவிக்கு வெற்றியை தந்திருக்கின்றன. ஹாட்ரிக் வெற்றியை ருசித்த இந்த அண்ணன் தம்பி கூட்டணியின் அடுத்தப் படம் சந்தோஷ் சுப்ரமணியம்.
பக்காவாக பிளான் செய்து திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படத்தில் நிறைய ஹைலைட்ஸ். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஒரிஜினல் பொம்மரிலுவில் நடித்த சித்தார்த், இதில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் டீமின் ஓபனராக இருந்த சடகோபன் ரமேஷ¤க்கு இந்தப் படம் சினிமாவைப் பொறுத்தவரை முதல் ஓபனிங். இதில் ஜெயம் ரவியின் அண்ணனாக நடித்துள்ளார் சடகோபன் ரமேஷ்.
சின்னத் திரையில் ஒதுங்கிவிட்ட கவுசல்யாவை அழைத்து வந்து ரவியின் அக்காவாக நடிக்க வைத்துள்ளனர். அப்பாவாக பிரகாஷ் ராஜ். அம்மாவாக கீதா. நகைச்சுவைக்கு சந்தானம், பிரேம்ஜி, சத்யன் என மூவரணி!
இந்தப் படமும் ஜெயித்தால் ஜெயம் ரவி - ராஜா கூட்டணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது வெற்றி. தவிர, தொடர்ச்சியாக நான்கு ரீ-மேக் படங்களை வெற்றிப்படமாக்கிய சாதனையும் சேரும்.