அடுத்த மாதம் கி.மு. பாடல்கள்!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (19:05 IST)
'தமிழன்' இயக்குனர் மஜித் புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் 'கி.மு.' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எடிட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்தார் மஜித்.

கலைவாணன் என்ற புதியவர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அடுத்த மாதம் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தயிருப்பதாக கூறினார் மஜித்.

இந்தப் படம் முடிந்ததும் உடனடியாக அருண் விஜய் நடிக்கும் 'துணிச்சல்' பட வேலைகளை மஜித் தொடங்குகிறார். ஆக்ஷன் படமான இது அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமையும் என்றார்.

'கி.மு.'வில் கலைவாணன் இசையில் எம்.ஜி. கன்னியப்பன், குகை மா. புகழேந்தி, முத்து விஜயன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தின் ஹைலைட் என்ன என்பதற்கு வடிவேலு என்று பதிலளித்தார் இயக்குனர். 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் பிஸியாக இருந்த நேரம் வடிவேலு நடித்துக் கொடுத்த ஒரே படம் இதுதானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்