'ரத்தக் கண்ணீர்' ரீ-மேக்கில் விவேக்?

சனி, 2 பிப்ரவரி 2008 (13:52 IST)
webdunia photoWD
காலத்தாலஅழியாத கலை வெளிப்பாடு எம்.ஆர். ராதாவின் 'ரத்தக் கண்ணீர்'. திருவாரூர் கே. தங்கராசுவால் எழுதப்பட்டு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் மேடையேறிய 'ரத்தக் கண்ணீர்' 1954ல் திரைப்படமாக வெளிவந்து தமிழகத்தை புரட்டிப் போட்டது!

தமிழ் சினிமாவின் ரீ-மேக் மோகத்தில் ரத்தக் கண்ணீரும் சிக்குண்டிருக்கிறது. 'சொல்லி அடிப்பேன்' படத்தல் ஹீரோவாக நடித்த விவேக்கிற்கு 'ரத்தக் கண்ணீர்' மீது ஒரு கண். காலத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் தூசு தட்டினால் ஒரு சில்வர் ஜூப்லி உறுதி என ரத்தக் கண்ணீரையே சுற்றி வருகிறார்.

'பீஷ்மர்' படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிவிட்ட நடிகர் ரஞ்சித் தயாரிப்பில் ரத்தக் கண்ணீரை இயக்கி நடிக்க விவேக் ஆயத்தமாகிறார் என்கிறது கோடம்பாக்க தகவல் ஒன்று.

ரத்தக் கண்ணீர் கதையை எழுதிய திருவாரூர் கே. தங்கராசுவை ஏற்கனவே விவேக் சென்று சந்தித்தார். நடிகவேளின் இடத்தை நிரப்ப நீங்கதான் சரியான ஆள் என தங்கராசு விவேக்கிற்கு பச்சை சிக்னல் காட்டியிருக்கிறார்.

விரைவில் சின்னக் கலைவானரிடமிருந்து சிறப்புத் தகவல் வரலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்