பரபரப்பை கிளம்பும் இயக்குனர் சாமி எய்ட்ஸ் நோயாளியை மையமாகக் கொண்டு இயக்கியிருக்கும் படம் மிருகம். தான்தோன்றித்தனமாக கெட்ட வழிகளில் நடக்கும் ஒருவன் எப்படி எய்ட்ஸ் நோயாளியாகி கஷ்டப்படுகிறான் என்பதுதான் படத்தின் கதை.
டாக்டர் ஜெயாஸ்ரீதர் நூறு எய்ட்ஸ் நோயாளிகளுடன் இப்படத்தை பார்த்திருக்கிறார். மிருகம் படத்தின் மூலம் மக்களுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா என்று இப்படத்தை பார்த்திருக்கிறார் டாக்டர்.
ஜெயா ஸ்ரீதர் எய்ட்ஸ் எரிமலை என்ற பெயரில் ஆராய்ச்சி புத்தகத்தை எழுதியவர்.
தொடர்ந்து எய்ட்ஸ் ஆராய்ச்சியும், விழிப்புணர்வையும் நடத்தி வருபவர். மிருகம் படம் ஒரு நல்ல காரியத்துக்கு பயன்பட்டால் பாராட்ட வேண்டியதுதான்.