உடனடியாக‌த் துவ‌ங்கு‌கிறது ரோபோ

புதன், 23 ஜனவரி 2008 (11:01 IST)
ரஜினி, ஷங்கர் கூட்டணியில் இப்போதுதான் சிவாஜி வெளிவந்து முடிந்திருக்கிறது எப்படியும் ரோபோ படத்தை தொடங்க தாமதமாகும் என்று பார்த்தால், படம் உடனடியாக தொடங்க இருக்கிறது என்கிறார்கள்.

காரணம் ஷங்கர் ரோபோ படத்தின் ஸ்கிரிப்டை பல வருடங்களுக்கு முன்பே முடித்துவிட்டார். புதிதாக ஸ்கிரிப்ட் வேலை இல்லாததால் படப்பிடிப்பிற்கான மற்ற காரியங்கள் துரிதமாக நடக்க தொடங்கிவிட்டனவாம்.

படத்தின் நடிகர்கள் தேர்வு தொடங்கிவிட்டது. வருகிற பிப்ரவரியில் ரோபோ படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்