ஹைதரபா‌த் ஜெயி‌லி‌ல் படமாகு‌ம் சு‌ப்ரம‌ணியபுர‌ம்

திங்கள், 21 ஜனவரி 2008 (12:53 IST)
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை சினிமாவில் ஜெயில் காட்சிகளை செட் அமைத்து எடுத்துக்கொண்டிருந்தார்கள். சமீபகாலமாக ஜெயில் காட்சிகளை சென்னை சென்ட்ரல் ஜெயிலில் எடுக்க அனுமதி கிடைக்கிறது.

பசுபதி, பழனி உட்பட தற்போது நிறைய படங்களை சென்ட்ரல் ஜெயிலில் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் புதுமுக இயக்குனர் சசிகுமார் தான் இயக்கிக் கொண்டிருக்கும் சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெறும் ஜெயில் காட்சிகளை ஹைதராபாத் ஜெயிலில் எடுக்க இருக்கிறார். சென்னை 08 படத்தில் நடித்த ஜெய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்