தாம்தூம் படத்தின் 80 சதவீதம் படம் முடிந்திருந்த வேளையில் படத்தின் இயக்குனர் ஜீவா காலமானார்.
அவர் மறைவிற்கு பிறகு மீதி படப்பிடிப்பு பி.சி.ஸ்ரீராம் முன்னிலையில் முடிக்கப்பட்டது.
படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவராக ஜெயம் ரவி நடிக்கிறார். மெடிக்கல் கான்பரன்ஸுக்காக ரஷ்யா செல்லும் ரவி அங்கே மொழி தெரியாமல் படும் திண்டாட்டம்தான் படமாம்.
ஜெயம் ரவிக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் ரஷ்யாவில் பெரும்பாலானோர்க்கு ஆங்கிலம் தெரியாது. இதனால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ரவி அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கலில் மாட்டுவாராம்.
பின்பு அதிலிருந்து விடுபடுவதை அடிதடி ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கிறார்களாம்.
படத்தில் ரவிக்கு கொங்கனா மற்றும் லட்சுமிராய் என்று இரண்டு ஜோடிகள்.