வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார் கஞ்சா கருப்பு.
லிங்குசாமியின் உதவியாளர் இயக்கும் பிடிச்சிருக்கு படத்தில் ஹீரோ அசோக்குக்கு இணையாக படம் முழுக்க வருகிற மாதிரி காமெடி கேரக்டர் ரோலும் கலந்து நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூனாவில் கிட்டத்தட்ட முப்பது நாள் நடந்தது. மொழி தெரியாத ஊரில் ரொம்பவே அவஸ்த்தை பட்டவர் கஞ்சாகருப்பு மட்டும்தான்.
ஹோட்டல், இன்னபிற இடங்களில் இவர் மொழி தெரியாமல் கஷ்டப்பட்டதை பார்த்து இவர் தங்கியிருந்த ஹோட்டலில் இவருக்காகவே தனியாக ஒரு உதவியாளரை போட்டார்களாம் ஹோட்டல் நிர்வாகம்.