லிங்குசாமி, ஏ.வெங்கடேஸிடம் உதவியாளராக இருந்த கணகு இயக்கியுள்ள படம் பிடிச்சிருக்கு.
முருகா ஹீரோ அசோக், கஞ்சா கருப்பு நடித்திருக்கும் இந்தப் படத்தின் மொத்த வேலைகளும் முடிந்துவிட்டது.
பொங்கல் அன்று எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும் உடன் ரிலீஸ் செய்வதென்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதற்கு முன்பாக வருகிற 21ம் தேதி படத்துக்கான ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் நடக்கவிருக்கிறது. விழாவுக்கு எப்போதும்போல் திரை பிரபலங்கள் பலரை அழைத்திருந்தாலும் முக்கியமாக எம்.எஸ்.விஸ்வநாதன், ஜானகி, பி.சுசிலா மாதிரி இசை சாதனையாளர்கள் பலரை ஒரே மேடையில் ஏற்றி வெளியிடப்போகிறார்கள்.