சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களுடைய விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' திரைப்படத்தினை டிசம்பர் 1ஆம் முதல் ஒளிபரப்ப உள்ளது.
இது குறித்து சென்னையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய திரைப்படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். `அய்ங்கரன் இன்டர்நேஷனல்' நிறுவனத்திடமிருந்து உரிமை பெறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தினை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு விமானத்தில் திரையிட உரிமை பெற்றுள்ளோம். எங்கள் விமானங்கள், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது, இப்படம் காட்டப்படும். ஒவ்வொரு மாதமும் 20 லட்சம் பேர் `சிவாஜி' படத்தை விண்ணில் பறந்தபடி பார்ப்பார்கள். இதுதவிர, கமல், ரஜினி, மணிரத்னம் ஆகியோர் படங்களை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.