நாக்ரவி பிரச்சினை தீர்ந்தது!

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (11:35 IST)
தீபாவளிக்கு முதல்நாள் ஓவர்சீஸ்க்காக கொடுக்கப்பட்ட படப்பெட்டியை ரகசியமாக போட்டுப் பார்த்து திருட்டு வி.சி.டி எடுத்தார் என்று மச்சக்காரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் டீம் தி.நகரிலுள்ள தியேட்டருக்கு போய் சண்டை போட்டது நினைவிருக்கிறதா?

webdunia photoWD
அதன் தொடர்பாக நாக்ரவியிடம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது அவரது தொலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்று பதில் சொன்னது.

இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடிகர் சங்க வளாகத்தில் தனது வழக்கறிஞர் ஷங்கரோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பிரச்சினையை பேசி முடித்துக்கொண்டோம். என்மீது தப்பில்லை என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் விளக்கமாக சொல்லிவிட்டேன் என்றவர்... இடையில் தொடர்புகொள்ளமுடியாமல் போனதுக்கு காரணம் மும்பைக்கு போயிருந்தேன்..அதான் என்று போய்வந்த டிக்கெட்டை எடுத்துகாட்டினார்.

பிரச்சினை முடிந்தால் சரிதான்!