தீபாவளிக்கு ரிலீஸாகுமா அழகிய தமிழ்மகன்?

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (16:19 IST)
அழகிய தமிழ்மகன் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்றார்கள். ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை.

லண்டனின் இருக்கும் ஏ.ஆர் ரகுமான் அங்கிருந்தபடி படத்தின் ரீ ரிக்கார்டிங் வேலையை செய்துகொண்டிருக்கிறாராம். இன்னும் ஒரு பாடலுக்கான டியூனை ஏ.ஆர் ரகுமான் தரவேண்டியிருக்கிறது.

அந்த பாடல் வந்த பிறகு அதனை படமாக்க வேண்டுமாம். அதனால் தீபாவளிக்கு படம் வருவது சந்தேகம்தான் என்று படத்தை விலைக்கு வாங்கிய சாய்மீரா நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

படம் எப்படியும் தீபாவளிக்கு ரிலீஸாகிவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறுகிறார்கள். எது நடக்கப் போகிறதோ தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்