டபுள் ஹீரோ சப்ஜெக்டுக்கு நோ சொல்லும் லாரன்ஸ்

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (12:09 IST)
இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால், கதையைக் கேட்காமலேயே நோ சொல்கிறார் இயக்குனர், நடிகர், டான்ஸ் மாஸ்டர் என்று பல்வேறு பட்டங்களை வைத்திருக்கும் லாரன்ஸ். அவர் கேட்கும் சம்பளமும் 50 லட்சத்துக்கும் மேலே இருக்கிறது.

கதை சொல்ல வந்த இயக்குனர்கள் யோசித்தால், தெலுங்கிலும், தமிழிலும் அவருக்கு இருக்கும்
மார்க்கெட், பிசினஸ் விவரங்களை பட்டியல் போட்டு கையில் கொடுக்கிறார்.

அவரை வைத்து படமெடுக்கலாம், என்று திட்டமிட்ட தயாரிப்பாளர் தேனப்பன், கன்டிஸன்களைக் கேட்டு திரும்பி வந்து விட்டார்.

இதற்கிடையே, தெலுங்குப் படமொன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். படத்தை இயக்குவது அவரல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்