நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் ரவிகிருஷ்ணா

webdunia photoWD
காளை படத்தை இயக்கும் தருண்கோபி அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் படம் இயக்கப் போகிறார்.

காளை படத்திற்கு முன்பே இந்த புராஜெக்ட் பேசப்பட்டது. ஆனால் உடனே படத்தை தொடங்க முடியாததால்
தருண்கோபி காளை படத்திற்கு வந்துவிட்டார்.

மீண்டும் இப்போது அந்த புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார்கள். கதையெல்லாம் ரெடியாம். படத்தின் கதாநாயகனாக ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா நடிக்கிறார்.

7 ஜி ரெயின்போ காலனி படத்திற்கு பிறகு ரவிகிருஷ்ணாவிற்கு எந்த படமும் சிறப்பாக அமையாததால் தருண்கோபி இயக்கும் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்