அழகிய தமிழ்மகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஹைதராபாத்தில் செட் போட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிகப்பெரிய ரயில்வே செட்டப் செட் போட்டு 200 துணைநடிகர்கள் சகிதம் ஹைதராபாத்தில் டேரா போட்டிருக்கிறது அழகிய தமிழ்மகன் டீம். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் மழை வந்து கெடுத்துவிட்டது.
பெருமழை காரணமாக தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாமல் படப்பிடிப்பு குழுவினர் அங்கே காத்துக்கிடக்கிறார்கள். மழை நின்றதும் படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு திரும்ப இருக்கிறார்கள்.