தமிழ் எம்.ஏ படம் வித்தியாசமான எக்ஸ்பரிமண்டல் படம் என்று ஒரு பேச்சு பரவியிருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை இது சாதாரண கமர்ஷியல் படம்தான் என்று எல்லோரிடமும் விளக்கம் சொல்லி கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் ராம்.
நான்கு பாடல்கள் இடம்பெறும் இப்படத்தில் குத்துப்பாடல் இல்லையாம். ஆனால் பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்குமாம். தமிழை மையப்படுத்தி பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறதாம்.
சென்னை பையனான ஜீவா கஷ்டமான தமிழ் வசனங்களை பேசி நடித்திருக்கிறாராம். இது பெரிதும் பாராட்டை பெறும் என்கிறார்கள்.