செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் மாலை நேரத்துக்கு மயக்கம் படத்தின் தலைப்பு ஆயிரத்தின் ஒருவன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் படத்தின் கதாநாயகி சந்தியா மாற்றப்பட்டு ரீமாசென் மற்றும் ஆன்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு ஜுலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கதை, திரைக்கதை வலுபடுத்த செல்வராகவன் இன்னும் டைம் எடுத்துக் கொண்டார். அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்கிறார்கள்.
இப்படி படம் பேச்சுவார்த்தை நடைபெற ஆரம்பித்ததிலிருந்து இப்படி எக்கச்சக்க மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஹீரோ கார்த்தி குழம்பி போயிருக்கிறார். பருத்திவீரன் ரிலீஸாகி இவ்வளவு நாளாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறதாம்.